மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை நோக்கிவந்த கள்ளழகர் இன்று காலை வைகையாற்றில் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வைகையாற்றில் எழுந்தருளினார். இதனையடுத்து ஆழ்வார்புரம் மற்றும் வைகை வடகரை ஆகிய பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மீது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனாக தோப்பறைகளை பயன்படுத்தி நீரை பீய்ச்சி அடித்தனர். 



 

அப்போது கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடிபாடி ஆரவாரத்துடன் உற்சாகமாக தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிலையில் சித்திரை திருவிழாவில் கள்ளழகரை தரிசனம் செய்வதற்காக வந்திருந்த 40 வயது மதிக்கதக்க ஒருவர் ஆழ்வார்புரம் அருகே வைகை ஆற்று தடுப்பணையில் நீரில் மூழ்கி சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.



 சடலமாக மீட்கப்பட்ட நபரின் அடையாளம் குறித்த தகவல்கள் கிடைக்காத நிலையில் உயிரிழந்த நபர் யார்? எப்படி உயிரிழந்தார் என்பது குறித்தான முழுமையாக தகவல் கிடைக்காத நிலையில் விளக்குத்தூண் காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை வைகை ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்த நிலையில் சடலத்தை பார்க்காமல் அதே பகுதியில் பக்தர்கள் கூடியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Kallazhagar Festival: ’வாராரு வாராரு அழகர் வாராரு’... பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்..!











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண