மதுரையில் 2 ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரம் பெண்கள் விடுதி மருத்துவமனை, மெடிக்கல் மற்றும் விடுதி அமைந்துள்ள கட்டங்களில் கீழ் அமைந்துள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டது.

 

மதுரையில் இயங்கிய பெண்கள் தனியார் விடுதி

 

மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகேயுள்ள கட்ராபாளையம் தெரு பகுதியில் விசாகா பெண்கள் தங்கு விடுதி என்ற பெயரில் தனியார் விடுதி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருகிறது. இங்கு மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த  45க்கும் மேற்பட்ட பெண்கள் விருதியில் தங்கி  படித்தும், பணிபுரிந்தும் வருகின்றனர். இதில் ஆசியர்களும், அரசு தேர்வு எழுதும் பெண்களும் தங்கியுள்ளனர்.  இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென விடுதியில் இருந்த பிரிட்ஜில் தீ விபத்து ஏற்பட்டு அதிகளவிற்கான நச்சு கரும்புகை  வெளியேறியுள்ளது.  இதில் மதுரை இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த  தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்த  பரிமளா சௌத்ரி மற்றும்  எட்டயபுரம் பேரிலோவன்பட்டியை சேர்ந்த அன்னம்மாள் டெக்னிகல் இன்ஸ்டியுட்டில் ஆசிரியராக பணிபுரியும் சரண்யா (27) ஆகிய இரு பெண் ஆசிரியர்களும் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலயே உயரிழந்தனர். 

 


 

மருத்துவமனையில் சிகிச்சை

 

மேலும் தீ விபத்தில் காயமடைந்த மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த வார்டனாக பணிபுரிந்த புஷ்பா (56) என்ற பெண்ணும், மேலூர் அட்டபட்டி பகுதியை சேர்ந்த ஜனனி என்ற முதலாமாண்டு செவிலியர் மாணவி மற்றும் விடுதியின் சமையலறான கனி ஆகிய 3 பேரும் மதுரை கென்னட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதனிடையே இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக திடீர்நகர் காவல்துறையினர் வருவாய்த்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் கீழ், விடுதியின் உரிமையாளரான TVS நகர் பகுதியை சேர்ந்த இன்பா ஜெகதீஸ் என்ற பெண் மற்றும் விடுதி காப்பாளரான  மருத்துவமனையில் 45% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவரும் புஷ்பா ஆகிய இருவர் மீதும் BNS 125(a) உயிருக்கு அல்லது உடற்பாதுகாப்பிற்கு காயம் விளைவித்தல் மற்றவர்களின்125(b) உயிருக்கு அல்லது உடற்பாதுகாப்பிற்கு மற்றவர்களின் கொடுங்காயம் விளைவித்தல மற்றும் BNS  105 பிரிவான  கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவிக்கும் குற்றத்திற்கான தண்டனை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

 



மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டது.



 

மேலும் தீ விபத்தில்  2 ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பெண்கள் விடுதி மருத்துவமனை மெடிக்கல் மற்றும் விடுதி அமைந்துள்ள கட்டிடங்களில் கீழ் அமைந்துள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டது.

 

பொதுமக்கள் அச்சம்

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுகலாம் என்ற பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் கீழ் தளங்களில் கடைகள் இயங்கிவரும் நிலையில் பாதுகாப்பாற்ற நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்கும் பணிகளை தொடங்கும் முன் மாற்று ஏற்பாடு செய்வதற்கான தங்களுக்கு உரிய கால அவகாசம் தர வேண்டும் என கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.