குழந்தைகளை பிரிட்ஜ் பின் புறத்தில் செல்ல அனுமதிக்கக் கூடாது. அது ஆபத்தாக கூட அமையலாம் என்று தெரிவித்தார்.


மதுரையில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து


மதுரை கட்ராபளையம் பகுதியில் உள்ள விசாகா பெண்கள் தங்கும் விடுதியில்வ்அதிகாலையில் பிரிட்ஜ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு 2 பெண்கள் மூச்சு திணறலால் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்தில் சிக்கிய பெண்களை காப்பாற்ற சென்ற பெண் வார்டன் உட்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரிட்ஜ் சிலிண்டர் எவ்வாறு வெடித்திருக்கும் என துறைசார்ந்த நபர்களிடம் கேட்டோம்.


பிரிட்ஜ் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு


இதுகுறித்து மதுரை செக்கானூரணி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தின் R & AC துறையின் பயிற்றுநர் k.ஆசை செல்வன் நம்மிடம் கூறுகையில்...,” பொதுவாக பிரிட்ஜ் உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் மற்றும் இயற்கையாக அழுகும் பொருட்களை விரைவில் கெட்டுப் போகாமல் தடுக்கிறது. இதனால் தற்போது எல்லா வீடுகளுக்கும் பிரிட்ஜ் பயன்பாடு முக்கியமாக மாறிவிட்டது. பிரிட்ஜ் வெடிப்பதற்கு முக்கிய காரணம் மின்கசிவு தான். எனவே பிரிட்ஜை நாம் பாதுகாப்பாக கையாள்வதும், பராமரிப்பதும் அவசியமான ஒன்றாகும். முன்பெல்லாம் பிரிட்ஜ்களில் 1.34 கேஸ் அளவு தான் பயன்படுத்தப் பட்டது. தற்போது வேகமாக குளிர்ச்சி கிடைக்கவேண்டும் என R600usp அளவுகள் கேஸ் கெப்பாசிட்டி கொண்ட பிரிட்ஜ்கள் தான் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.


கவனமாக கையாள வேண்டும்


பிரிட்ஜ் பின்புறம் உள்ள கேஸை கடத்த மெல்லிய பைப் லைன்கள் இருக்கும், இவை நாம் பிரிட்ஜை நகட்டும் போதும் அசைக்கும் போதும் கீறல் விழுந்து கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதே போல் மாப்போட்டு தரையை துடைக்கும் போதும் கூட பிரிட்ஜில் பட்டு கம்பிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு நடக்கும் போது எதிர்பாராத விதமாக கேஸ் லீக் ஆகி வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால் பிரிட்ஜை நகர்த்தும்போது, நெருங்கும் போதும் கவனமாக கையாள வேண்டும். தினமும் பிரிட்ஜை குறைந்தபட்சம் இரண்டு முறையாவது திறந்து மூட வேண்டும். நீண்ட நாட்கள் வெளியூர்களில் தங்க வேண்டியது இருந்தால், பொருட்களை வெளியே வைத்து பிரிட்ஜை அமத்திவிட்டு, லேசாக திறந்த நிலையில் வைக்க வேண்டும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பிரிட்ஜை நகட்டும் போது பிரிட்ஜிற்கு 30 நிமிடம் ஓய்வு கொடுத்துவிட்டு கழட்ட வேண்டும். அதே போல் அதனை ஆன் செய்யும் போது 30 நிமிடம் சீராக ஒரே இடத்தில் வைத்துவிட்டு ஆன் செய்ய வேண்டும்.


ஏசி இருக்கும் அறையில் பிரிட்ஜ் நோ...!


அதே போல் பிரிட்ஜை கெமிக்கல்கள் கொண்டு சுத்தம் செய்யாமல் சாதாரண எழுமிச்சை சாறு கொண்டு சுத்தம் செய்தால் பாதிப்பு ஏற்படாது. பிரிட்ஜிற்கு பின்னால் சேகரமாகும் தண்ணீரை அவ்வப்போது எடுத்துவிட வேண்டும். அதே போல் பிரிட்ஜ் மேலே உணவு பொருட்கள், ஐயன்பாக்ஸ், செல்போன், அழகு சாதன பொருட்கள் என தேவையற்ற பொருட்களை வைக்கக்கூடாது. பிரிட்ஜ் உட்புறத்தில் உள்ள ஸ்விட்சை முழுமையான அளவிற்கு கூட்டி வைக்கக் கூடாது. சீரான நேரத்தில் மட்டும் குளிர்ச்சி கொடுக்கும் வேகத்தில் உயர்த்த வேண்டும். அதேபோல் ஏசி உள்ள அறையில் பிரிட்ஜை பயன்படுத்தக் கூடாது. பிரிட்ஜில் உள்ள கம்பரசரை அடிக்கடி செக் செய்து கொள்ள வேண்டும். கம்பரசரை மாற்றவில்லை என்றாலும் அதில் உள்ள கேஸை குறிப்பிட்ட காலகட்டத்தில் மாற்றுவது நல்லது. பிரிட்ஜில் அடிக்கடி வேலை வராமலும் இருக்கும். அதே போல் பிரிட்ஜ் வெப்பமான இடத்தில் வைக்கக்கூடாது. சுவருக்கும் -  பிரிட்ஜிற்கும் போதுமான இடைவெளி வேண்டும். குழந்தைகளை பிரிட்ஜ் பின் புறத்தில் செல்ல அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.