கடந்த 4ம் தேதி முதல், 6ம் தேதி வரை  மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சினேகப் பிரியா தலைமையில் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் சோதனை நடைபெற்றது.  இந்த சோதனையில் 100 டன் ரேஷன் புழுங்கல் அரிசியானது கைப்பற்றப்பட்டு உள்ளது. 

 





மேலும், ரேஷன் அரிசி கடத்தலுக்கு தொடர்பான 17 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் கடத்தலுக்கு துணை போகும் நபர்கள் மற்றும் ரேஷன் அரிசியை பதுக்கும் குடோன்களை அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஆய்வாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.



 

சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசி கடத்தி பதுக்கும் நபர்கள் மற்றும் அரிசியை அரைத்து பதுக்கி வைத்திருக்கும் குடோன்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.