திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே நல்ல கண்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது அக்காவின் கணவர் சின்னத்தம்பி மற்றும் சிலர் அதே ஊரை சேர்ந்த பொன்ராஜ் என்பவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த சிறுமியின் பெற்றோரின் நத்தம் காவல் நிலையத்தில் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தனர்.
இதையடுத்து உடனடியாக நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி, சிறப்பு சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன், காவலர்கள் பாக்கியராஜ், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் திண்டுக்கல் கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்ட சோதனைச் சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து வாகன சோதனையை தீவிர படுத்தி தீவிரமாக தேடிவந்த நிலையில் மொபைல் சிக்னலை வைத்து சிறுமி கரூரில் இருப்பது தெரிய வந்தது.
விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். கடத்தப்பட்ட 8 மணி நேரத்தில் சிறுமியை மீட்கப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய புதுக்கோட்டை மாவட்டம் சரனூரை சேர்ந்த ராமசாமி என்பவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார் சிறுமியின் அக்கா கணவர் சின்னத்தம்பி மற்றும் இதில் தொடர்புடைய 4 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்