கடல் கடந்த காதல்... மும்மதப்படி திருமணம்..அமெரிக்க மாப்பிள்ளையை கரம் பிடித்த மருத்துவர்... கொடைக்கானலில் ருசிகர சம்பவம்..


மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் பலருக்கும் மனதிற்கு நெருக்கமான இடமாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் நசீரா தாவூத், திண்டுக்கல்லில் பிறந்திருந்தாலும் பள்ளி படிப்பை முடித்தவுடன் பெங்களூருவில் மருத்துவம் பயின்று மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் மருத்துவ படிப்பை முடித்து அமெரிக்காவில் மருத்துவராகவும் ,சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார் நசிரா.


TN Rain Alert: இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன? இன்றைய வானிலை நிலவரம் இதோ..




இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற இவர் அங்கு பொறியாளராக இருந்து வரக்கூடிய பில் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த வருடம் காதலர்களின் அடையாளமாக கருதப்படும் தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தன்னுடைய சொந்த மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் திருமணம் நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார் நசிரா தாவூத்.


தொடர்ந்து கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் மருத்துவர் நசீரா தாவத்திற்கும் அமெரிக்காவை சேர்ந்த பொறியாளர் பில் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடல் கடந்து வந்த காதல், மலையில் ஒன்று சேர்ந்தது. எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் தம்பதியினரின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் உடன் இருந்தனர்.


CM MK Stalin: தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு




கோரிக்கை வைத்த பனைத் தொழிலாளர்கள் - ஒரு கோடி பனை விதைகள் நட நடவடிக்கை எடுத்த அரசின் உத்வேகம்…!


இதில் ருசிகரமாக நசீரா மற்றும் பில் ஆகிய இருவரும் ஜாதி , மதம், இனம் கடந்து காதலித்த நிலையில் அவர்களுடைய திருமணம், காலையில் கிறிஸ்துவ முறைப்படியும், பகலில் இந்து முறைப்படியும், மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் நடைபெற்றது.


மும்மதத்தை பறைசாற்றி , பாரம்பரியத்தை காப்பாற்றி மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இத்திருமணம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. மதம் , சாதியை சுமந்து செல்லும் சிலருக்கு மத்தியில் மும்மதத்தையும் ஒன்று சேர்ந்து நடைபெற்ற இச்சம்பவம், கொடைக்கானலில் ருசிகர சம்பவமாக மாறி உள்ளது.