1.சிவகங்கையில் நேற்று 14 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வீடு, வீடாகத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி படங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் பிரதமர் புகைப்படம் இல்லை என பா.ஜ.கவினர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து மறியலில் ஈடுபட்டனர்.
2.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 200 க்கு மேற்பட்டோர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
3.இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மஞ்சூர் கிராமத்தில் மீன் எண்ணைய் தயாரிக்கும் ஆலையை மூடக் கோரி கிழக்கு கடற்கரை சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் நிலவியது. கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.
4. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதிகளிலிருந்து சமையல் மஞ்சள், புகையிலை உள்ளிட்ட பொருள்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில்இலங்கை கடற்படையினர் கடல் எல்லைப் பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டிருந்த போது அங்கு வந்த படகை பரிசோதனை செய்ததில் 60வது சாக்கில் 2100 கிலோ மஞ்சள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து படகில் இருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை கல்பட்டி கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
5.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படையினர் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மனோலி தீவு வழியாக இலங்கைக்கு கடத்திய 1,500 கடல் அட்டைகள் மற்றும் நாட்டுப்படகை இந்திய கடலோரக் காவல் படை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
6. நெல்லை மாவட்டத்தில் இரு தரப்பினர் கொலை சம்பவம் உள்ளிட்ட பிரச்னை காரணமாக கோபாலசமுத்திரம் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கோபாலசமுத்திரம் பகுதியில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டதால் பள்ளி, வேலை,கல்லூரி போன்ற இடங்களுக்கு செல்பவர்கள் செய்வதறியாது தவிக்கிறார்கள். இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
7. சிவகங்கை மாவட்டத்தில் கவிஞர் மீரா அவர்களின் பெயரில் இலக்கிய வட்டமும், வ.உ.சி அவர்களின் பெயரில் படிப்பகமும் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஆய்வாளர்கள் தங்கி படிக்கும் வகையில் நூல்களும், இடவசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஆசிரியர் இளங்கோ, கா.காளிராசா தீனதயாளன், கர்ணன், ராஜ்குமார், கதிர்நம்பி, குட்டிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
8. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட ஜே.ஜே நகர் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இருவரும் இணைந்து வழங்கினார்கள்.
9 .நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சின்ன அரியாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த மாணவி ஸ்வேதா நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில் காணமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது, இந்த நிலையில் தேனி, உத்தமபாளையம் காவல் நிலையத்தில் மாணவி ஸ்வேதா தனது காதலனுடன் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் தெரிவித்துள்ளார்.
10. காதலிப்பதாக பெண் குரலில் ஏமாற்றி, தற்பாலின சேர்க்கை வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காஞ்புரத்தை சேர்ந்த முருகன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !