தேனி மாவட்டம் பசுமைப் போர்வை போர்த்திய படி விவசாயத்தாலும் இயற்கை சூழலும் ரம்மியமாக காணப்படும் மாவட்டமாகும். மாவட்டம் முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்து உள்ளது மாவட்டத்தின் கூடுதல் சிறப்பாகும். உலகம் முழுவதிலும் உள்ள மலை ஏற்றத்தை விரும்பும் நபர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள மலைகளில் ட்ரெக்கிங் செய்ய மிகவும் விருப்படுவர். குறிப்பாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி  மலைப்பகுதியில் ட்ரெக்கிங் செல்லவும், மலை ஏற பயிற்சி பெறவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.



எந்த ஒரு அசம்பாவிதத்தையும் கண்டிராத அமைதியான  சுற்றுலா தலமான குரங்கணியில் முதல் முறையாக கேட்ட அலறல் சத்தம் இன்று வரை மலை முழுவதும் ஒலித்துக் கொண்டுதான் உள்ளது. குரங்கணி மலைப்பகுதியில் மலை ஏற்றத்திற்கு சென்ற 39 பேரில் 23 பேர் காட்டுத்தீயில் உடல் கருகி உயிரிழந்த சம்பவத்தை எவராலும் மறந்திருக்க முடியாது. இந்த சம்பவம் தொடர்பாக மலையேற்றப் பயிற்சிக்கு தலைமை வகித்ததாக கூறி குரங்கனி போலீஸார் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான் கெய்ட் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவர் பெல்ஜியம் செல்ல அனுமதி கோரிய நிலையில் 2 மாதம் பெல்ஜியம் சென்று வர உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  அனுமதி அளித்துள்ளது.



பீட்டர் வான் கெய்ட் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்...,” தேனி  மாவட்டம் போடியில் குரங்கனியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்த நால்வர் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். இதில் என் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மலையேற்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இந்நிலையில் மலையேற்றப் பயிற்சிக்கு தலைமை வகித்ததாக கூறி குரங்கனி போலீஸார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தீ விபத்து சம்பவத்தின் போது நான் பெல்ஜியம் நாட்டில் இருந்தேன். இந்த நிலையில் நான் இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி  உயர்நீதிமன்ற கிளையில்  மனு தாக்கல் செய்த போது, என்னுடைய. (கடவு சீட்டை) பெல்ஜியம்   தூதரகத்தில்  கடந்த 2018 ஆம் ஆண்டு ஒப்படைத்தேன். தற்போது பெல்ஜியம் நாட்டில் உள்ள எனது தாயார் உடல் நலக்குறைவால் உள்ளார். எனவே அவரை சென்று பார்க்க வேண்டிய சூழலில் உள்ளேன்.



எனவே பெல்ஜியத்தில்  உடல் நலக்குறைவாக உள்ள எனது  தாயாரை பார்க்க செல்ல உள்ளதால்,  எனது பாஸ்போர்டை என்னிடம் ஒப்படைக் க உத்தரவிடவேண்டும் என மனு தாரர் மனுவில் கூறி உள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,  இந்த வழக்கு நடைபெறும்  தேனி நீதிமன்றத்தில் இதுகுறித்து உரிய பிரமான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.  வழக்கு விசாரணை வழக்கம் போல் நடைபெற வேண்டும்.  இவரது சார்பில்,  இவரது வழக்கறிஞர் ஆஜராக வக்காலத்து தாக்கல் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து, பெல்ஜியம் தூதரகத்தில் தற்காலிகமாக பாஸ்போர்டை பெற்று கொண்டு,  2 மாதத்திற்குள் பெல்ஜியம் சென்று திரும்ப வேண்டும் என நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 'அது அவர் ஸ்டைல், இது இவர் ஸ்டைலு.. ரஜினியோட சிஷ்யன் தானே இவரு'.. நடிகர் வடிவேலு ஜாலி பேட்டி !