சுருளி அருவி சுற்றுலாத்தலமாக மட்டுமல்லாமல் ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்குகிறது. காரணம் இந்த அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோயில் உள்ளது. ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்கும் இத்தலத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிமார்கள் வாழ்ந்து வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. ஆதலால் இறந்த முன்னோர்களுக்கு திதி போன்ற ஈமச் சடங்குகளை செய்வதற்கு, இங்கு கூடும் கூட்டத்திற்கு அளவே இல்லை என்றும் குறிப்பிடலாம்.


ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாளன்று இறந்த முன்னோர்களுக்கு ஈமச்சடங்கு செய்வதற்கு உள்ளூர் வெளியூர் அல்ல வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து கூட ஏராளமான மக்கள் இங்கு வருவது வழக்கம்.


Lok Shaba Election: இந்தியாவில் இத்தனை கோடி வாக்காளர்களா? தேர்தல் ஆணையம் வெளியிட்ட க்ளியர் ரிப்போர்ட்




அருவிக்கு செல்லும் முக்கிய வழியில் சுருளி மலையில் அமைந்துள்ள  அருள்மிகு கோடிலிங்கேஸ்வரர் கோவிலில் வளாகத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டு செய்து வருகின்றனர். அதன் அடிப்டையில் 72 அடி உயர லிங்கத்திற்கு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இத்திரு கோவில் மிகவும் பழமை வாய்ந்த  கோவில் ஆகும். இக்கோவிலில்  விநாயகர், ரெங்கநாதன் சுவாமி, பிரம்மா, சிவன் உள்ளிட்ட சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பல  வருடங்களாக பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Lover Movie Review: காதலில் பிரச்சினை காதலர்களா, தவறான புரிதலா? மணிகண்டனின் "லவ்வர்" பட விமர்சனம் இதோ!




முன்னதாக நேற்றையதினம் முதல் காலயாக பூஜை விக்னேஸ்வர பூஜை/ மகா கணபதி ஹோமம் ,அணுகஞ்,புண்மையாக வாசனம், பூரணாகுதி, உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது பின்னர் இரண்டாம் கால யாகசால பூஜைகள் தொடர்ந்து இன்று காலை மூன்றாம் காலயாக பூஜை, கன்னிமார் பூஜை, சுமங்கலி பூஜை, கோ பூஜை,நாடி சந்தானம், மகாபூர்ணகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாத்திரை தானம் செய்யப்பட்டு கடம் புறப்பாடாகி அருள்மிகு கோடிலிங்ஸ்கேஸ்வரர்  மற்றும் பரிகார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


OTT Release Today: தியேட்டருக்கு நிகராக ஓடிடியில் இன்று வெளியான மாஸ் ஹீரோ படங்கள்: உற்சாகத்தில் ரசிகர்கள்!




இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கும்பத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்ட தண்ணீர் கொண்டு தீர்த்தவாரி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த நிகழ்வில் கம்பம் காமயகவுண்டன்பட்டி அனைப்பட்டி சுருளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து சென்றனர் இந்த கும்பாபிஷேக விழாவில் அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.