விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜியின் சகோதரி நான். எனது மகன் வசந்தகுமார் ,ரமணா மற்றும் ஓட்டுநர் ராஜ்குமார் ஆகியோரை கடந்த 17-ஆம் தேதி அன்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உள்ள வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்காக விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் காவல்துறையினர் துன்புறுத்தி உள்ளனர். இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மனுதாரர் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மூவரிடமும் காவல்துறையினர் கையெழுத்து பெற்றுள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியின் உறவினர் என்பதற்காக என்னையும் ,எனது மகன்கள் மற்றும் ஓட்டுனரயும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார் .
இந்த வழக்கு இன்று அவசர வழக்காக நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் முன்னாள் அமைச்சர் மீது சுமத்தப்பட்ட அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்காக குடும்ப உறுப்பினர்களை காவல்துறையினர் மிகவும் தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே காவல் துறையின் சட்டவிரோத செயலில் இருந்து குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனை பதிவு செய்த நீதிபதி குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை எப்படி வேண்டுமானாலும் தேடிக்கொள்ளுங்கள் விசாரணை செய்யுங்கள். ஆனால் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்தது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை தேவைப்பட்டால் அவர்களுக்கு முறையான சம்மன் அனுப்பி விசாரணை செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகின்ற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
மேலும் படிக்க : மீண்டும் "கனா காணும் காலங்கள்"... எல்லையில்லா மகிழ்ச்சியில் 90ஸ் கிட்ஸ்!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
''அணுகுமுறை ஓகே... ஆனா சண்டை போடுறார்'' - கோலி குறித்த கேள்விக்கு பட்டென பதிலளித்த கங்குலி!