விஜய் டிவியில் ஒளிபரப்பாகி 90ஸ் கிட்ஸ்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'கனா காணும் காலங்கள்' பள்ளியின் கதை, கல்லூரியின் கதை என 2 பிரிவுகளாக வெளிவந்தது. கல்லூரியின் கதையை காட்டிலும் இன்றளவும் முதல் முதலில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் பள்ளியின் கதை அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று.
தொடர் ஆரம்பிக்கும் முன்பு வெளியாகும் பாடலான "கனவுகள் காணும் வயசாச்சு, இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு" பாடல் இன்றும் பலரது செல்போன்களில் ரிங்க்டோனாக ரிங்காரம் அடித்து வருகிறது. இந்த தொடரில் நடித்த பலரும் தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நாயகன், நாயகியாக ஜொலித்து வருகின்றனர்.
ரியோ, இர்பான், பிளாக் பாண்டி, கவின் என்ற பலர் தற்போது சின்னத்திரை டு வெள்ளித்திரையில் வலம் வர தொடங்கிவிட்டனர். மேலும், தற்போது கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த அனைவரும் இணைந்த ரீயூனியன் நிகழ்ச்சி புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
இந்தநிலையில், இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து விஜய் டிவி மீண்டும் கனா காணும் காலங்கள் தொடரை எடுக்க தொடங்கிவிட்டது. முழுக்க முழுக்க பள்ளியின் கதையாக இருக்கும் எனவும், புதிய முகங்களை கொண்டு இந்த தொடர் தயாராகி வருவதாகவும் தெரிகிறது.
இந்த தொடருக்கான புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய சீசனில் கல்லூரி கதை தொடரில் நடித்த வெற்றி மற்றும் பல பேர் பள்ளியின் ஊழியர்களாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தற்போது எடுக்கப்பட்டு வரும் கனா காணும் காலங்கள் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யாமல் ஹாட் ஸ்டாரில் வெளியாகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்