தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆரஞ்சு, ரெட் அலர்ட் விடப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று கனமழை பெய்தது. இதன் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதுமாகவே பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கொடைக்கானலில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வரக்கூடிய நிலையில் கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை அருகில் இருக்கக்கூடிய மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.


 




 


மூங்கில் காடு என்ற கிராமம் இந்த ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த ஆற்றில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஒன்றாக சேர்ந்து வரக்கூடியதால் இந்த பகுதியில் காட்டாற்று வெள்ளம் இன்று காலையில் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய ஆற்றுப்பகுதியில் தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதிலும், விளை பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் அடைந்தனர்.


Breaking News LIVE: ஈரான் அதிபர் மரணம் : அரசு கட்டிடங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடி




இதனை தொடர்ந்து பரபரப்பான மூங்கில் காடு பகுதிக்கு விரைந்த அரசு துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்த நிலையில் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சலுடன் ஒரு பெண் கடக்க முடியாமல் குழந்தையுடன் ஆற்று அருகில் நின்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர், பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு அக்குழந்தையை தனது தாயுடன் தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டு அவரது உறவினரது வீட்டில் கோட்டாட்சியர் ஒப்படைத்தார். மேலும் மூங்கில் காட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் தேவை எனில் உடனடியாக செய்து தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வெள்ளம் குறையாத நிலையில் அந்த ஆற்றை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.