கொடைக்கானலில் பரபரப்பு... யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது

கொடைக்கானல் அருகே யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது - 10 மணி நேரம் விசாரணைக்கு பின் யானை தந்தம் பறிமுதல்.

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும். கொடைக்கானல் மலைப்பகுதியில் எழுபது சதவீதத்திற்கும் மேலாக வனப் பகுதிகள் அமைந்துள்ளதால் கொடைக்கானல் மலைப்பகுதியில் வனவிலங்குகள் ஏராளமாக இருக்கின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் அருகே உள்ள கீழான வயல் பகுதியை சேர்ந்த சந்திரசேகரிடம் யானை தந்தம் இருப்பது பற்றி வத்தலகுண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் பொன்வண்ணன் ஆகியோருக்கு  யானை தந்தம் இருப்பது தெரியவந்துள்ளது.

Continues below advertisement

Kalai Thiruvizha: 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா; ஆக.22 தொடக்கம்


அப்போது யானை தந்தத்தை விற்பனை செய்ய வேண்டும் என்று சந்திரசேகர் முயன்றுள்ளார். இவருக்கு முருகேசன் மற்றும் பொன்வண்ணன் ஆகிய இருவரும் இடைத்தரகர்களாக இருந்துள்ளனர். இவர்கள் யானை தந்தத்தை விற்பனை செய்வதற்காக முயன்றுள்ளனர். அப்போது whatsapp மூலமாக கேரளாவை சேர்ந்தவர்களுக்கு யானைத் தந்தங்களின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாது யானை தந்தம் பெறக்கூடியவர்கள் ஒரு சிலரிடமும் யானை தந்தம் தங்களிடம் இருப்பதாக தொடர்ந்து இவர்கள் பேசி வந்தனர்.

Kerala Lottery Result Today (12.08.2024): WIN WIN W-782-782 : பரிசுகள் அறிவிப்பு 3 மணிக்கு..

இந்நிலையில்  நேற்று அதிகாலை சந்திரசேகரின் வீட்டிலிருந்து யானை தந்தத்தை சந்திரசேகரும், அவருடன் இருந்த முருகேசன் மற்றும் பொன்வண்ணன் ஆகிய மூன்று பேர் யானை தந்தத்தை எடுத்து ஜீப்பில் வைத்துக் கொண்டு கீழான வயலில் இருந்து மன்னவனூர் பகுதிக்கு எடுத்து வந்தனர். அப்போது இவர்களை தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வந்த வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் யானை தந்தத்துடன் மூன்று பேரையும் பிடித்துள்ளனர்.


ஆடு திருடியதை பார்த்த நபர் கொலை; 5 ஆண்டுக்கு பின் கொலையாளி சிக்கியது எப்படி?

ரகசியமாகவே வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் இவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தது தெரிய வந்தது. இந்நிலையில்  நேற்று விற்பனை செய்ய முயன்ற போது யானை தந்தத்தை எடுத்து வந்த போது அவர்களை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து கொடைக்கானலை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.


விசாரணையில் சந்திரசேகருக்கு யானை தந்தம் எங்கிருந்து கிடைக்கப்பெற்றது? யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்ய முயன்றிருக்கிறார்? எவ்வளவு ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டிருக்கிறது? போன்ற பல்வேறு கிடுக்குப்பிடியான கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 10 மணி நேர விசாரணைக்கு பிறகு சந்திரசேகர், முருகேசன் பொன்வண்ணன் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து யானை தந்தது பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement