திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற மலைகளின் இளவரசி என அழைக்கப்படும், கொடைக்கானலில் வருடந்தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நடைபெறும். இந்த விழாவில் தோட்டக்கலைத்துறை சார்பாகவும், சுற்றுலா துறை சார்பாக மலர் கண்காட்சி  நடத்தப்படும். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக மலர்கண்காட்சி நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த வருடம் மலர் கண்காட்சியை நடத்துவதற்கும், கோடை விழா நடத்துவதற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Karti Chidambaram: "எத்தனை முறை ரெய்டு... இது ஒரு சாதனை" : சிபிஐ ரெய்டு தொடர்பாக கார்த்தி கிண்டல் ட்வீட் !




Nithyananda : ‛நான் சொல்வதெல்லாம் உண்மை...’ ஆதாரத்தை வெளியிட்ட நித்யானந்தா!


இந்த அறிவிப்பில் கொடைக்கானலில் கோடை விழா 2022, மற்றும் ஐம்பத்தி ஒன்பதாவது மலர் கண்காட்சி ஆகியவை வரும் 24.5.2022-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் வரும் 24.5.2022 முதல் 29.5.2022 வரை ஆறு நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர் கண்காட்சியும், 24.5.2022 முதல் 2.6.2022 வரை 10 நாட்கள் சுற்றுலா துறை மூலமாகவும், கோடை விழாவும் நடத்தப்படவுள்ளது.




Watch Video : என்ன க்யூட்டா பாடுறாங்கப்பா.. ப்பா வாய்ஸ்..தமிழில் பாடகியாக அறிமுகமாகும் மஞ்சு வாரியர்..!


மேலும், இவ்விழாவில் 10 நாட்களுக்கு பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் ,விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன்பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும், திண்டுக்கல் மற்றும் அருகில் உள்ள மாவட்ட பொது மக்கள் மற்றும் கொடைக்கானல் நகர் பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் நிகழ்ச்சிகள் தொடர்பான விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர் சுற்றுலா அலுவலகம் 624101 என்ற முகவரியில் நேரிலோ, 04542241675  என்ற அளவு தொலைபேசியின் மற்றும் 9092861549 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு  தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண