வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Cyclone Mandous LIVE: மயிலாடுதுறையில் 500 வீடுகளை சூழ்ந்த கடல்நீர்
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் மாண்டஸ் காரணமாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் மாண்டஸ் புயல் எதிரொலியாக சூறைக்காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக நகர் பகுதி நெடுஞ்சாலைத்துறை பகுதி வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது ராட்சத மரங்கள் முறிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றது.
மதுரையில் விசிக சார்பில் அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை: திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்..!
கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.
தொடர் மழை காரணமாக இன்று இந்த சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்படுவதாகவும், புயல் மழை குறைந்த உடன் இந்த சுற்றுலா இடங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், நகர் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் தற்காலிகமாக படகு சவாரி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மரங்கள் விழுந்து வாகனங்களும் சேதமடைந்துள்ளது இதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்