சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ’வைகைப் புயல்’ வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் இன்று வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரமான நாய் சேகர் எனும் லீட் ரோலில் நடித்துள்ளார். இவரின் மகளாக விஜய் ஸ்டார் மற்றும் பாடகியான சிவாங்கி கிருஷ்ணகுமார் நடித்துள்ளார்.
மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலாக ’எங்க அப்பத்தா’ பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்தது. இந்தப் பாடல் வரிகளை துரை, அசல் கோலர் இணைந்து எழுதியுள்ளனர். நடிகரும், பிரபல கொரியாக்ராஃபருமான பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.
இந்தியாவின் முதல் நாய் கடத்தும் நபர்' என ட்ரெய்லரில் அதகளமாக வடிவேலு அறிமுகமான நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இன்றைய தினம் தியேட்டர்களில் படம் திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தை காலை முதல் காட்சியில் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். வடிவேலு சிரிக்க வைத்தாரா இல்லையா என்பதை தெரிந்துகொள்வோம்!