கொரோனா வைரஸ் கடந்த 2 வருடங்களாக உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில் அதன் பரவல் மற்றும் தாக்கம் குறைந்து வந்ததால் தமிழக அரசு ஊராடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகளை அளித்து வந்தது. அதன்படி வர்த்தக நிறுவனங்கள் சுற்றுலா தலங்கள் திரையரங்குகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.

  



கொரோனா வைரஸ் மாணவர்களுக்கு பாதிக்காமல் இருக்க பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தாலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏழு  ரோடு அருகே  செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் தமிழகம் மட்டுமில்லாது வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த மாணவர்கள் கடந்த ஒருவாரமாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். 



இந்நிலையில் இன்று  திங்கட்கிழமை முதல் பள்ளி வகுப்புகள் ஆரம்பிக்கபட இருந்த நிலையில் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் கொரியாவை சேர்ந்த ஒரு மாணவருக்கும், ஜப்பானை சேர்ந்த ஒரு மாணவருக்கும், கொடைக்கானலை சேர்ந்த 2 மாணவர்கள் உள்ளிட்ட 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து  இந்த மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நபர்கள்  14 நாட்கள் பள்ளி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாக கொடைக்கானல் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


 


தேனி மாவட்டத்தில் பெரியகோவில் என அழைக்கப்படும் வரலாற்றுமிக்க, புகழ்பெற்ற பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவில்.


தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும் Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!