திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தை சேர்ந்த முருகன், லட்சுமி தம்பதியரின் மகள் உமா மகேஸ்வரி (23). இவர் கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கலில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்துகொண்டிருந்த பொழுது விழுப்புரம் அருகே உள்ள உளுந்தூர் பேட்டையை  சேர்ந்த துரைப்பாண்டி (27) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.




இந்த தம்பதிக்கு வெற்றிமாறன் என்ற 3 வயது குழந்தையும் புவனேஸ்வரன் என்ற 6 மாத குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறில் உமாமகேஷ்வரி கணவனை பிரிந்து தேனியில் உள்ள அவரது அத்தை வீட்டில் தங்கி இருந்து உள்ளார். இந்நிலையில் துரைப்பாண்டி அங்கு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகின்றது .




அப்போது உமா மகேஸ்வரி துரைப்பாண்டியன் அச்சுறுத்தல் தாங்கமுடியாமல்  தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கவே காவல்துறையினர் விசாரணை நடத்தி உமா மகேஷ்வரி மற்றும் குழந்தைகளையும் தேனியில் உள்ள மைதிலி சொசைட்டி  காப்பகத்தில் தங்கியுள்ளனர். அப்போது உமாமகேஷ்வரியிடம்  துரைப்பாண்டி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சேர்ந்து வாழலாம் என கூறி உளுந்தூர்பேட்டைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும், மீண்டும் இருவருக்கும்  தகராறு ஏற்படவே மீண்டும் புவனேஸ்வரி தேனியில் உள்ள காப்பகத்திற்கு வந்து தங்கியுள்ளார்.



இந்நிலையில் உமா மகேஷ்வரி தங்கியிருந்த தொண்டு நிறுவனமான மைத்ரி சொசைட்டியில் உள்ள வீட்டுக்குள் புகுந்த கணவன் துரைப்பாண்டி தன் மனைவி உமா மகேஸ்வரியை தனது ஆத்திரம் தீரும் வரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து  தப்பி சென்றுள்ளார். இத்தகவல் அறிந்த காப்பக ஊழியர்கள், படுகாயங்களுடன் கிடந்த உமாமகேஸ்வரியை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியை. அரிவாளால் வெட்டிய கணவர் மீது வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை தேடி வருகின்றனர். குடும்பத்தகராறில் கணவனே மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவான சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


 


தேனி : காசிக்கு நிகரான பெரியகோவில், பெரியகுளம் முருகன் கோவிலுக்கு ஏன் இத்தனை சிறப்பு..


 


தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


 


Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!