கொடைக்கானல் சுற்றுலா சென்று திரும்பிய பேருந்து மழைச்சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. பேருந்து கவிழ்ந்த போது இரண்டு மரங்கள் பேருந்தை தடுத்து அரணாக நின்றதால் சிறு காயம் இன்றி 42 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Chief Minister Mk Stalin :10 முக்கிய கோரிக்கைகளை எனக்கு அனுப்புங்க... எம்.எல்.ஏக்களுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்!

குஜராத் மாநிலம் மிசானா மாவட்டம்  உன்ஜனா கிராமத்திலிருந்து 42 நபர்கள் கர்நாடகா மாநிலத்தில் சுற்றுலா பயணத்தை முடித்த பின்பு அங்கிருந்து கர்நாடகா தனியார் பேருந்து மூலமாக ஊட்டி மற்றும் பழனியில் சுற்றுலா மேற்கொண்ட பின்பு நேற்று மாலை கொடைக்கானல் சுற்றுலா சென்றுள்ளனர்.

Sonali Phogat: கோவாவில் தங்கியிருந்தபோது மாரடைப்பு! பிக்பாஸ் பிரபலமும், பாஜக நிர்வாகியுமான சோனாலி உயிரிழப்பு!

இந்நிலையில் சுற்றுலா முடித்துக் கொண்டு பேருந்தில் சுற்றுலாவாசிகள் கிளம்பியுள்ளனர். கொடைக்கானல் சாலை டம்டம்பாறை பகுதிக்கு கீழ் சாலையின் வளைவில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட முயற்சி செய்தபோது பேருந்தில் பிரேக் பிடிக்காத நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்புச் சுவர்களை உடைத்துக் கொண்டு சாலைக்கு கீழ் கவிழ்ந்தது. 

அப்போது அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் பேருந்தின் பின்பக்கம் மற்றும் வலது புறம் உள்ள கண்ணாடிகளை உடைத்து கவிழ்ந்த பேருந்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளை உடனடியாக மீட்டனர்.

நாய் குறுக்கே வந்ததால் திடீர் பிரேக் போட்ட அரசு பேருந்து ஓட்டுநர்: தவறி விழுந்த நடத்துநர் பலி!

மேலும் பேருந்து விபத்தில் பயணம் செய்த 42 பேருக்கும் எந்தவித சிறு காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர். இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் ஒரு சிறு காயம் இன்றி தப்பிப்பதற்கு பேருந்து கவிழ்ந்த இடத்தில் இருந்த இரண்டு மரங்கள் பேருந்தை தடுத்து நிறுத்தியதால் உயிர் சேதம் இன்றி அனைவரும் தப்பித்துயுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண