கேரளாவில் வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, வானிலை மையம் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கோட்டையம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் பகுதியில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 


Papua New Guinea: அதிகாலை 3 மணிக்கு மண்ணில் புதைந்த முழு கிராமம்.. இதுவரை 100 பேர் உயிரிழப்பு?


இதனால் ஆழப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா மாநிலத்தில் ஆறு மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று மட்டும் பாலக்காடு மாவட்டத்தின் மன்னார்காடு பகுதியில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 


மற்றொரு சிக்கல்... ஐ.ஏ.எஸ் மனைவி கொடுத்த தடாலடி புகார்! முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் அதிரடி கைது


பருவமழை ஆரம்பமாகும் முன்பே தற்போது பெய்து வரும் கோடை மழையால் கேரளா சிக்கித் தவிக்கிறது, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மழை எச்சரிக்கைகளை மறுபரிசீலனை செய்ய தூண்டுகிறது. மாநிலத்தின் எர்ணாகுளம் மற்றும் திருச்சூரில் சிவப்பு எச்சரிக்கையும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.




24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை, மாநிலத்தில் அதிகரித்து வரும் வானிலை மாற்றம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுருத்தப்படுகிறது.  ஆரஞ்சு எச்சரிக்கை 11 செமீ முதல் 20 செமீ வரை மிகக் கனமழையைக் குறிக்கிறது.


Kaamya Karthikeyan: இளம் வயதிலேயே அசத்தல்! 8849 மீட்டர் உயர எவரெஸ்ட் சிகரத்தை ஏறி 12ம் வகுப்பு மாணவி சாதனை..!


கேரளாவில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், மாநில மக்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.