நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ராயன் வருகிற 26 ஆம் தேதி வெளியாகும் நிலையில் தனுஷ், செல்வராகவன், கஸ்தூரிராஜா மற்றும் குடும்பத்தினர் தேனியில் உள்ள குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்தனர்.




துள்ளுவதோ இளமை படத்தில் நாயகனாக அறிமுகமான தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியுள்ளது ராயன். இப்படத்தை தனுஷே இயக்கி நாயகனாக நடித்துள்ளார். சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராமன், துஷாராவ்விஜயன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் என ஏராளமான பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


CM Stalin: தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் : பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்


ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், ஜாக்கி கலை வடிவமைப்பும் செய்துள்ளார்கள். ராயன் படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ராயன் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் ஹைதராபாத்தில் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் ராயன் படம் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.


பட்ஜெட் பரபரப்புக்கு மத்தியில் ராகுல் காந்தியைச் சந்தித்த அமைச்சர் அன்பில்- என்ன காரணம்?




இந்த நிலையில் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் நடிகர் தனுஷின் குலதெய்வமான கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோயிலில் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தனர். இந்தக் கோயில் புனரமைப்பு பணிக்கு நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரிராஜா பெரிய நிதி உதவி கொடுத்து உள்ளார். இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.




இதற்கிடையே நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் தனது 50வது திரைப்படமான ராயன்  உலககெங்கும் ரிலீஸ் ஆகிறது. தனது 50வது திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு நடிகர் தனுஷ், அவருடைய அண்ணன் செல்வராகவன், இவர்களின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரிராஜா மற்றும் தனுஷின் மகன்கள் குடும்பத்தினர்கள் அவரது குலதெய்வ கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் தாயார் விஜயலட்சுமியின் குலதெய்வ கோயில் போடியில் உள்ளது, அந்த கோயிலுக்கும் குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்தனர்.