ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது புயலின் தாக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் வெளிய செல்ல முடியாமல் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
ஃபெஞ்சல் புயல் தாக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலும் எதிரொலித்துள்ளது. இது குறித்து மத்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சபரிமலை பகுதிகள் உட்பட கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மணிக்கு 2 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
இந்த நிலையில் கேரளாவின் பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், சபரிமலை பக்தர்கள் ஆற்றில் இறங்கவோ, குளிப்பதற்கு தடை விதித்தும், சத்திரம் வழியாக மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர்கள் தனித்தனி உத்தரவில் கூறியிருப்பதாவது, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கனமழை எச்சரிக்கை நீக்கப்படும் வரை, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் மலைப்பாதைகளில் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரேம் கிருஷ்ணா உத்தரவில் தெரிவித்துள்ளார். கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம், நீர் தேக்கம், நிலச்சரிவு மற்றும் பிற பேரிடர் அபாயம் அதிகரித்துள்ளது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. "கடும் மழையின் காரணமாக மலைப்பகுதிகள் மற்றும் காடுகள் திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் மண்சரிவுகளுக்கு குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவை.
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!
இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று அது மேலும் கூறியது. நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது, எந்த சூழ்நிலையிலும் நதிகளைக் கடக்கவோ அல்லது குளிக்கவோ அல்லது பிற நடவடிக்கைகளில் ஈடுபடவோ கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. முக்குழி-சத்திரம் வனப் பாதை வழியாகப் பயணிக்க தடை விதித்து உத்தரவை பிறப்பித்த இடுக்கி மாவட்ட ஆட்சியர் வி.விக்னேஷ்வரி, வானிலை சீராகும் வரை தடை தொடரும் என்று தெரிவித்துள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.