தமிழக கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்க பகுதியான ஆனவச்சாலில் கார் பார்க்கிங் அமைத்துள்ள கேரள வனத்துறையினரை கண்டித்து தமிழக விவசாயிகள் பல்வேறு கட்சியினருடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?




தேனி, மதுரை இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப்பெரியாறு அணை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.‌ அணையின் நீர்த்தேக்க பகுதியான ஆனவச்சாலில் கேரள வனத்துறை சார்பில் தேக்கடி படகுத் துறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டது.‌ அதனைக் கண்டித்து தமிழக விவசாய சங்கத்தினர்கள் பல்வேறு சட்டப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.‌ அதன் தொடர்ச்சியாக  பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில்  பல்வேறு கட்சியினர் இணைந்து தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் உள்ள லோயர் கேம்ப்பில் எல்கை முற்றுகை கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.


Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..




இதில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்கங்கள் உள்பட பல்வேறு பார்வேர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் பத்திரப்பதிவு சங்கத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கப் பகுதியான ஆனவச்சாலில் கேரள வனத்துறை அமைத்துள்ள கார் பார்க்கிங்கை அகற்ற வேண்டும், அணையின் நீர்த்தேக்கப்  பகுதிகளை சர்வே ஆஃப் இந்தியா மறு அளவீடு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், முல்லைப்பெரியாறு அணைக்குள் அதிகாரம் செய்யும் கேரளாவைச் சேர்ந்த சிறு நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் அணையை விட்டு வெளியேற வேண்டும், 


டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்!


முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் தமிழன்னை படகை அணைக்குள் இயக்குவதற்கு, கொச்சின் போர்ட் ஆஃப் அத்தாரிட்டி உத்திரவிட வேண்டும், பேபி அணையை பலப்படுத்தி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கேரளா, தமிழகம் மற்றும் மத்திய அரசுகளை கண்டித்தும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக செயல்பட்டு வரும் கேரளா அரசியல்வாதிகளையும் தனியார் அமைப்புகளையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.