கீழடி அகழாய்வில் உடைந்த நிலையில் செம்பு பொருள் கண்டெடுப்பு.. என்ன தெரியுமா?

கீழடி 10-ம் கட்ட அகழாய்வில் உடைந்த நிலையில் செம்பு உலகத்திலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கீழடியில் நாள்தோறும் புதிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதுதொல்லியல் ஆர்வலர்களிடையே  உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

keezhadi excavation: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18-ம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியான கொந்தகை, விருதுநகர் மாவட்டம்- வெம்பக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர், திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் மற்றும் கடலூர் மாவட்டம் - மருங்கூர் ஆகிய 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார்.

- 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் திமுக போட்டியிடுமா? - கரு.நாகராஜன் சவால்

தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு தமிழ்நாடு 15 இலட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்றுத் தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு, தொல்லியலாளர்கள் இடையே மட்டுமின்றி உலகத் தமிழர்கள் இடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.

செம்பு பொருள் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் ஏற்கெனவே கண்ணாடி பாசி மணிகள், தா எனும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. கடந்த, திங்கள்கிழமை மீன் உருவிலான சிவப்பு வண்ண பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது  உடைந்த நிலையில் செம்பு உலகத்திலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இரும்பு, வெண்கல போன்ற கடின தன்மையில்லாத செம்பு பொருளாக பயன்படுத்தி இருக்கலாம் எனவும், இதனை ஆய்வுக்கு உட்படுத்தும் போது எத்தகைய பொருள், இதன் காலம் என்ன என்பது தெரிய வரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் கீழடியில் நாள்தோறும் புதிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருவது தொல்லியல் ஆர்வலர்களிடையே  உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தேனி: நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் கலசம் திருடு போனதாக புகார்

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?

Continues below advertisement