கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் அவர்கள் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாக இன்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 


சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே அமைந்துள்ளது கச்சநத்தம் கிராமம். கோயில் திருவிழாவில் மரியாதை கொடுக்கும் விவகாரம் தொடர்பான பிரச்சினையில் இந்த கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஆறுமுகம், சண்முகநாதன் மற்றும் சந்திரசேகர் ஆகிய 3 பேரை வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.


இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் ஆவரங்காட்டைச் சேர்ப்த 33 பேரை கைது செய்தனர். அவர்களின் 2 பேர் உயிரிழந்த நிலையில், சிறுவர்கள் தவிர 27 பேர் மீதான வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


இந்த வழக்கின் விசாரணை நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கான தண்டனை காலம் நேற்று முன்தினம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண