திண்டுக்கல்-பழனி சாலையில் முத்தனம்பட்டி அருகே தனியார் நர்சிங், கேட்டரிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவருக்கு உடந்தையாக விடுதி வார்டன் அர்ச்சனா என்பவர் இருந்ததாகவும் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தாடிக்கொம்பு போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் அர்ச்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



மேலும் கல்லூரி தாளாளரை கைது செய்ய போலீசார் செல்வதற்குள் அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கோர்ட்டில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் சரண் அடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜோதிமுருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தாடிக்கொம்பு போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.




இதையடுத்து அவரை திண்டுக்கல் மகிளா  நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் போளூர் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது ஜோதிமுருகனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தாடிக்கொம்பு போலீசார் அனுமதி கேட்டனர். அதன்பேரில் கல்லூரி தாளாளரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜோதிமுருகனை போலீசார் காவலில் எடுத்துச்சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையானது முடிவடைந்து திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர் டிசம்பர் 10 ஆம் தேதி வரை பழனி கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார் அதன்பேரில்  பழனி சிறையில் ஜோதிமுருகன் அடைக்கப்பட்டார்.


மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


திண்டுக்கல் : கருப்பன், அண்ணாத்த படங்களில் நடித்த கல்லூரி தாளாளரால் பாலியல் தொல்லை.. மாணவிகள் சாலை மறியல்..


’’திண்டுக்கல் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளரும், அமமுக நிர்வாகியுமான ஜோதி முருகனை கைது செய்யக்கோரி மாணவிகள் போராட்டம்’’


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண