ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ்திரையுலகத்திற்கு அறிமுகமாகிய நடிகர் ஜெயம்ரவி , எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, பேராண்மை, டிக் டிக் போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி திரைப்பட நட்சத்திரமாக நடித்து வருகிறார். இதனையடுத்து நடிகர் ஜெயம்ரவிக்கு தமிழகம் முழுவதிலும் பல்வேறு ரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் பகுதியை சேர்ந்த செந்தில். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை என இரு குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்தார். செந்தில் கடந்த 10ஆண்டுகளாக ஜெயம் ரவியின் தீவிர ரசிகராகவும், ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்ட தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது தொழில் காரணமாக லாரியில் சென்றபோது லாரி கவிழந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
புதிய திரைப்பட படப்படிப்பில் இருந்த நடிகர் ஜெயம் ரவி தனது ரசிகரின் மறைவு குறித்து செய்தி அறிந்த நேற்று மாலை மதுரை நிலையூர் பகுதியில் உள்ள செந்திலின் வீட்டிற்கு நேரில் சென்ற நடிகர் ஜெயம் ரவி செந்திலின் மனைவி மற்றும் இரு குழந்தைகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் படிக்க - அனைத்து வகையான கல்லூரிகளிலும் 69% இட ஒதுக்கீடு கட்டாயம்; முழுமையான பாடங்கள்: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்
மேலும் செந்திலின் குடும்ப வறுமையை போக்க குடும்பத்தின் நலனுக்காக 5 லட்சம் ரூபாயை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதாகவும், செந்திலின் இரு குழந்தைகளுக்குமான கல்விச்செலவை முழமையாக ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வின் போது மாநில நிர்வாகிகள் ஷாம் சாக், செயலாளர் கார்மேகம், மாநில பொறுப்பாளர் தவசி ஆகியோர் உடனிருந்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -Palani Temple: பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை நிறுத்தம் - எத்தனை நாள் தெரியுமா..?