திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருக பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலை முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.  தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் மிகவும் சிறப்பு மிக்க கோயிலாகும். ஆனால் கோயிலின் மலை மீது அமைந்துள்ளதால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் படிகள் வழியே ஏறி செல்வது சிரமமான செயலாகும்.




Syllabus: 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, முழு பாடங்களும்.. பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு


இதற்காக அரசு சார்பில் அங்கு ரோப்கார் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருடந்தோறும் இந்த ரோப்கார் மின் இயந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்படும். இந்த நிலையில் பயணிகளுக்கான ரோப்கார் (கம்பி வட ஊர்தி ) வருடாந்திர பராமரிப்பு பணிக்காக வரும் 16.6.2022 ஆம் தேதி முதல் 30.7.2022 ஆம் தேதி வரை 45 நாட்கள் மட்டும் நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கோயிலுக்கு  வரும் பக்தர்கள்  மின் இழுவை ரயில் பாதை மற்றும் யானைப் பாதை வழியாக மலை கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யுமாறு கோயில் நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


How to Murder Your Husband : "கணவனை கொல்வது எப்படி?" புத்தகத்தை எழுதிய கொலையாளி எழுத்தாளர்.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..


 






 


முன்னதாக, பழனி முருகன் கோயிலின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுவோர்களுக்கு கோயில் சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ண புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு - முழு விவரம் உள்ளே


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண