தமிழக உறுதிமொழி ஏற்பு குழு தலைவரும் வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏவுமான வேல்முருகன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்.


தமிழகத்தில் 500 மதுபான கடைகளை மூடுவது பற்றி வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்த கேள்விக்கு:


இது குறித்து தொடர்ந்து சட்டமன்றத்திலும் முதல்வரிடம் வலியுறுத்தினேன். இப்போது தமிழக முதல்வர் அவர்கள் 500 மதுபான கடைகளை முடுவதாக அறிவித்து அதற்கான கடைகளை கணக்கெடுத்து நாளையிலிருந்து(இன்று) கடைகளை மூட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது ஒரு முன்மாதிரியான முயற்சி வரவேற்புகான, பாராட்டுகான முயற்சி. படிப்படியாக அனைத்து கடைகளும் மூட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோளையும் வைக்கிறேன்.




டாஸ்மாக் கடை மூடுவது செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு


இது முற்றிலுமாக தவறான கருத்து. நான் சட்டமன்றத்தில் பேசும் போதும். ஏனைய பிரதான எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையும், உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஆட்சிப் பொறுப்பு வந்ததிலிருந்து படிப்படியாக 500 கடைகள் முட நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதனால் செந்தில் பாலாஜி கைதிற்கும் எள் அளவும், எள்  முனையளவும் தொடர்பில்லை.


நான் தான் அரசின் உறுதிமொழி குழு இயற்பின் தலைவர் முதல்வர் சட்டமன்றத்திலேயே அறிவித்தார். மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சரும் சட்டமன்றத்திலேயே அறிவித்திருக்கிறார் சட்டமன்றத்தில் குறிப்புகள் இருக்கின்றன. எனக்கு உண்மை தெரியும். முன்னாள் அமைச்சர், அண்ணன் ஜெயக்குமார் கூறுவது உண்மை அல்ல




இலாகா இல்லாத அமைச்சராக தொடர கூடாது என எதிர்கட்சிகள் கூறுவது குறித்த கேள்விக்கு:


அவர்கள் அரசியல் செய்வதற்காக போராடுகிறார்கள். இது போன்ற நேரங்களில் பல்வேறு மாநிலங்களில் 3 தருணங்கள் இருக்கின்றது. அந்த முன்னுதாரணத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கடைபிடிக்கிறார். அமைச்சராக யார் இருக்க வேண்டும்யார் இருக்கக் கூடாது, யாருக்கு எந்த இலாக்கா தர வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம், உரிமை முதல்வருக்கு மட்டுமே உண்டு. அதனையே இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது, அதனையே முதலமைச்சர் அவர்கள் செய்கிறார்கள் இலக்கில்லாத அமைச்சராக இருக்க வேண்டுமா அல்லது உடல்நிலை தேறிய பின் அமைச்சரவை பொறுப்பு வழங்கப்படுமா என்பதை முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட அதிகாரம்.




அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்ந்து முதல்வரும் கைது செய்யப்படுவார் என அண்ணாமலை கூறியது பற்றிய கேள்விக்கு:


முதலமைச்சர் மீது எந்த  குற்றச்சாட்டுகளோ, எந்த வழக்குகளும் இல்லை. செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியில் 2015ல் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக இன்றைக்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. தற்பொழுது உச்ச நீதிமன்றம் கூட சில அறிவுரைகளை வழங்கி உயர்நீதிமன்றத்திற்கு வழிகாட்டுகிறது. ஆகவே நீதிமன்றம் இந்த வழக்கை கவனித்துக் கொண்டிருக்கிறது. அமைச்சராக இருந்தாலும் முதல்வராக இருந்தாலும் உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டும்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.