தமிழ்நாட்டின் மற்றும் தமிழர்களின் முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை. தைத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்பிரசித்தி பெற்றவை ஆகும்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை காண்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ரசிகர்கள் வருவது வழக்கம்.
தைத்திருநாள் அன்று அவனியாபரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அவனியாபுரத்தில் நாளை காலை தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை ஏபிபி நாடு யூடியூப் பக்கம் மூலமாக நேரலையாக ஜல்லிக்கட்டு ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். ஏபிபி நாடு செய்தி தளத்தின் முதலாவது பொங்கல் பண்டிகை தினத்தை ரசிகர்களாகிய நீங்கள், எங்களது யூடியூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பாக உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசித்து மகிழ்ச்சி அடையலாம்.
நாளை நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் மட்டுமின்றி, நாளை மறுநாள் பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளையும், திங்கட்கிழமை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளையும் நமது ஏபிபி நாடு யூ டியூப் பக்கத்தில் நேரலையாகவே கண்டு ரசிக்கலாம். இந்த போட்டிகள் முழுவதும் நமது மதுரையின் மண்வாசனை மாறாமல், தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் பறைசாற்றும் வகையில் அற்புதமான வர்ணணையோடு நேரலையாக செய்யப்பட உள்ளது.
நாளை காலை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த போட்டியை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், பிரமுகர்கள் பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளனர். போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல், பங்கேற்கும் மாடுகளின் விவரமும் ஏற்கனவே தயாராகி விட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்