கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் வைரஸ் பரவலை தடுக்க, தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஊரடங்கு விதிமுறைகளும் கடுமையாக விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
Pongal 2022 | நெருங்கும் பொங்கல் பண்டிகை.. மாடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தேனி கோவிலின் சிறப்பு தெரியுமா?
இந்தநிலையில் நேற்று 12-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனிக்கு பாதயாத்திரையாக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லாததால் கிரிவலம் சுற்றி வந்து அடிவாரம் பாத விநாயகர் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி சென்றனர்
இன்னும் 5 நாட்களில் பொங்கலோ பொங்கல்...!- பொங்கல் விரத முறைகளை விளக்கும் ஆன்மீக பெரியவர்கள்
தேனியில் 2500 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்டம் கண்டுபிடிப்பு
வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் கூடுவதை தடுக்க வேண்டுமென வரும் 18 ஆம் தேதி வரையில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதையில் கூட்டம் கூட்டமாக வலம் வரும் பக்தர்கள் காவடி சுமந்து ஆடிபாடி சாமி தரிசனம் செய்து சென்றனர். பக்தர்கள் விரைவாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் போலீஸார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பக்தர்களை மலைமீது செல்ல அனுப்பி வருகின்றனர்.
pongal 2022 | திருநங்கைகள் எல்லா துறைகளிலும் இருக்க வேண்டும் - ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் திருநங்கை நெகிழ்ச்சி பேட்டி
பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு பணியில் 600 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க போலிஸாரும், கோவில் நிர்வாகமும் தொடர்ந்து பக்தர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. மேலும் பக்தர்கள் வரும் பாதையில் இடையூறு ஏற்படாமல் இருக்க கனரக வாகனங்கள் பழனி நகருக்குள் வராமல் மாற்றுப்பாதையில் அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். தை முதல் நாளுக்கு முந்தைய நாள் எப்பொழுதும் வழக்கமாக கூடும் கூட்டத்தை விட இன்று அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் கோவில் நிர்வாகத்தினரும் போலிசாரும் திணறினர்.