ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி உற்சவ திருவிழா- பால்குடம் எடுத்து வேல் குத்தி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.






மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அமைந்துள்ள  அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவிலில் 70 ஆண்டு பங்குனி உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பக்தர்கள் அதிகாலை முதலே வைகையாற்றில் பால்குடம் எடுத்து,வேல்குத்தி பறவைக்காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

 

 

குறிப்பாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால்குடம் 5000 மேற்பட்ட பக்தர்கள் வேல் குத்தியும் பறவைக்காவடி எடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 





இதற்காக வைகை ஆற்றில் இருந்து ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோவில் வரை 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



 

இது குறித்து சோலை அழகுபுரத்தை சேர்ந்த பக்தர் பாண்டியம்மாள் கூறுகையில்..,” வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா பங்குனியில் நடைபெறும். மதுரையில் முக்கியமான கோயிலில் இதுவும் ஒன்று. பக்தர்கள் வைகை ஆற்றிற்று நேத்திக்கடன் எடுத்து கோயிலுக்கு வருவோம். பால்குடம் ,வேல்குத்தி பறவைக்காவடி என ஏராளமான நிகழ்வு இருக்கும் இது மிகவும் விசேஷமானது. மதுரையே திரும்பி பார்க்கும் அளவிற்கு பிரமாண்டமாகும் இருக்கும். வீரமாகாளியம்மன் கோயிலில் வேண்டுதல் எடுத்துக் கொண்டு நேத்திக்கடன் செய்தால் கண்டிப்பாக நிறைவேறும்” என்றார். திருவிழாவில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் நேத்திக்கடன் செலுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.