மதுரை மாவட்டத்தில் உள்ள 11  தாலுகாக்களிலும் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 11 தாலுகாவிற்குள் 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவுத்தேர்வு நடைபெற்றது.

 





 

நேற்று முன்தினம் திடிரென நள்ளிரவில் கிராம நிர்வாக உதவியாளர் தேர்விற்காக மதுரை தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தேர்வுமையத்தில் உள்ள ஆங்கில திறனறிவுத் தேர்வுக்கான விடைத்தாளை சிலர் சமூகவலைதளங்களின் மூலமாக அனுப்பியதோடு விடைத்தாள்களை பெற 10 ஆயிரம் ரூபாய் கேட்டும் அனுப்படுவதாக கூறி சமூகவலைதளங்களில் விடைத்தாள்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

 


 

இந்நிலையில் ஆங்கில திறனறி தேர்வுக்கான வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்த மதுரை தெற்கு  தாசில்தார் கல்யாணசுந்தரம் பணியிட மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தெற்கு வட்டாட்சியர் பொறுப்பு தாசில்தாராக முத்துப்பாண்டி என்பவரை நியமித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் உத்தரவு.



 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர