சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் டி.சி.எஸ் பவுண்டேசன் நிதி மூலம் ரூ ஒரு கோடி 27 லட்சம் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் பிளாண்ட் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம்  மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி , தொகுதி எம்.எல்.ஏ மாங்குடி ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது  தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது  கார்த்தி ப சிதம்பரம் கூறியதாவது, “தஞ்சைத் தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்து அதிர்ச்சியாகவும் வருத்தமாக உள்ளது. முதல்வர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்”.




 ஆறுமுகசாமி ஆனையம் குறித்து கேள்விக்கு, ’ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமோ ? சதியோ ? சூழ்ச்சியோ ? இருப்பதாக எனக்கு தெரியவில்லை.  ஜெயலலிதா ஒரு சர்க்கரை நோயாளி - உடல் ரீதியாக நோயினால்  பாதிக்கப்பட்டிருந்தவர். எனவே இயற்கையாக இறந்திருப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன். எந்த அறிக்கை வந்தாலும் இப்படி தான் வரும் சிறந்த மருத்துவர்கள் மூலம்  ஜெயலலிதாவுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். சசிகலா அரசியலுக்கு வரலாம் வரலாம் வராமலும் போகலாம் அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. என்னைப் பொருத்தவரையில் அ.தி.மு.க ஒற்றை  தலைமையில் செயல்படக்கூடிய பெரிய அரசியல் கட்சி இன்றைக்கும்  தொண்டர்கள் வாக்கு வங்கி அப்படியே உள்ளது.





இரட்டை தலைமை தான் அ.தி.மு.கவிற்கு குழப்பம் எம்.ஜி.ஆர்., ,ஜெயலலிதா என ஒற்றை தலைமையில் செயல்பட்ட கட்சி அதை நோக்கித்தான் அ.தி.மு.க., செல்லும் என்பது என்னுடைய ஆருடம் என்று கூறினார். இந்தியாவில் இஸ்லாமியர்கள் பய உணர்வுடன் தான் வாழ்ந்து வருகின்றனர். பாஜக அரசு அவர்களை நசுக்கி வருகிறது. இஸ்லாமியர் குறித்து கற்பனை உலகில் அண்ணாமலை கருத்து தெரிவித்து வருகிறார். நிஜ உலகத்தில் இஸ்லாமியர்களுக்கு நடக்கும் கொடூரங்கள் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது என்று கூறினார்.