திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சிறப்பு வாக்காளர் சேர்ப்பில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி ‌புகார்.

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சேர்க்கைப் பணியின்போது, ஏறக்குறைய 7,227 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். சுமார் 26 வாக்குச்சாவடிகளில் இந்த முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், இதன் பின்னணியில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை சம்பந்தப்பட்டிருப்பதாகவும் சின்னாளபட்டி பேரூராட்சியில் உள்ள மொத்த வாக்குகளில் சுமார் 7,227 வாக்காளர்களின் பெயர்கள் 'இடம்பெயர்ந்துவிட்டார்கள்' (Shifted) எனக் குறிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்றும் நேற்று காலை முதலே ஆத்தூர் வட்டாட்சியர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நேரடியாகச் சென்று அங்கிருந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களை (BLO) வற்புறுத்தி, "இனி சேரும் வாக்குகளை 'Shifted' என்று போடுங்கள்" எனக் கூறி வாக்காளர் சேர்க்கைப் பணியை முடித்துவைக்கச் சொல்லி இருக்கிறார்.

Continues below advertisement

ஆத்தூர் தொகுதியில் மொத்தம் 21,800 முதல் 22,000 வாக்குகள் வரை இதுபோன்று 'Shifted' எனப் பதிவு செய்யப்பட்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகதகவும் சிறப்புச் சேர்க்கைப் பணி தொடர வேண்டிய நிலையில் இரவோடு இரவாக இப்பணியை வட்டாட்சியர் முடிந்து விட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.  2016 ஆம் ஆண்டுத் தேர்தலில் சின்னாளபட்டியில் 17,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது நடைபெற்ற சிறப்புச் சேர்க்கையில் 16,800 வாக்குகளே சேர்க்கப்பட்டுள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளார். 

ஒட்டுப்பட்டியில் இருந்தும் சுமார் 60 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும், சின்னாளபட்டி பகுதியில் பலர் வியாபாரம் நிமித்தமாக வெளியூர்களுக்குச் சென்று திரும்புபவர்கள் என்பதால் சேர்க்கைக்கான கடைசி நாள் வரை பொறுமையாக இருந்து சேர்க்கை நடத்தப்பட்டிருக்க வேண்டும் ஆனால், சேர்க்கைப் பணிகள் அவசரமாக நிறுத்தப்பட்டதால், இன்று வந்த பலரும் வாக்காளராகச் சேர முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர் "வாக்காளர் பட்டியலில் பெரிய தவறு நடந்துள்ளதற்கு , மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.