முக்கிய சாலையில் உள்ள தனியார் வர்த்தக நிறுவனத்தில் போதை இளைஞர் ஒருவர் கையில் பட்டாகத்தியுடன் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் மேலும் சாலை சென்ற பழம் விற்கும் தொழிலாளியையும் கத்தியால் வெட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பழனி சாலையில் காளிமுத்து பிள்ளை சந்து அருகே தனியார் நிறுவனமான வசந்த்&கோ உள்ளது. இப்பகுதியில் மதுபோதையில் ஒரு இளைஞர் கையில் பட்டா கத்தியுடன் சாலையில் கூச்சலிட்ட வண்ணம் வந்துள்ளார். வந்தவர் தனியார் வர்த்தக நிறுவனமான வசந்த & கோ உள்ளே சென்று கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். அவர்கள் பணம் தர மறுக்கவே அவர்களை மேலும் கத்தியை காட்டி மிரட்டிய போது ஆட்கள் அதிகமாக இருந்ததால் போதை இளைஞர் கம்யூட்டரை வெட்டி விட்டு வர்த்தக நிறுவனத்தில் இருந்து வெளியே வந்து சாலையில் நடந்து செல்பவர்களை கத்தியை காட்டி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதில் சாலையில் தட்டு வண்டியில் பழம் வியாபாரம் செய்யும் ரத்தினகுமார் (55) என்பவரை போதை இளைஞர் தனது கையில் வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டியுள்ளார் இதில் தலை காயத்துடன் ரத்தினகுமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் போதை இளைஞர் சாலையில் சென்றவரை வெட்டிய நிலையில் அவரது நண்பர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து போதை இளைஞரை கூட்டிச் சென்றதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போதையில் வந்த இளைஞர் கத்தியை காட்டி வணிக நிறுவனத்தில் மிரட்டியதால் இப்பகுதியில் உள்ள வணிகர்கள் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதி முழுவதுமே பெரிய வர்த்தக நிறுவனங்கள் மிகப்பெரிய மால்கள் என பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் மருத்துவமனையும் உள்ள நிலையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய இப்பகுதியில் கையில் கத்தியுடன் போதையில் இளைஞர் வந்து ஒருவரை வெட்டியதால் தற்போது பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சமும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பட்டா கத்தியுடன் வந்த அந்த நபரை தேடி வருகின்றனர்.
தேனியில் கலவரம்... திடீர் பரபரப்பு... கடைசியில் தான் தெரிந்தது....!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X