உலக மகளிர் தின விழா பொதுக்கூட்டம்:


தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் மார்ச் 8 அகில உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு  பெண்களை உள்ளடக்கிய முன்னேற்றம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பெண்களுக்கு பாதுகாப்பான சட்டம் ஏற்ற மத்திய மாநில அரசுக்கு தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.




பெண்களை உள்ளடக்கிய முன்னேற்றம் வேண்டும், சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வேண்டும், விவசாய விளை  பொருட்களுக்கு ஆதார விலை செய்திடுவது உள்ளிட்ட 13 தீர்மானங்களை மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Election Congress: பெண்களுக்கான காங்கிரசின் 5 அதிரடியான தேர்தல் வாக்குறுதிகள் - ரூ.1 லட்சம் நிதியுதவி




உலக மகளிர் தின விழா:


தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு பேருந்து பணிமனை அருகில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை உள்ளடக்கிய முன்னேற்றம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாநில செயலாளர் பொன்னுத்தாய் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மத்திய மாநில அரசுகள் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்ய வேண்டும், அரசு மற்றும் தனியார் துறைகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்,


Lok Sabha Elections 2024 TN: தொகுதிப் பங்கீடு ஓவர் - இவங்க 3 பேர் மட்டும் வேணாம்! - காங்கிரஸ்க்கு லிஸ்ட் போட்ட திமுக?




 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


இந்திய முழுவதிலும் மது மற்றும் போதை பொருட்கள் முற்றிலுமாக தடை செய்து பூரண மதுவிலக்கு தேசிய அளவில் அமல்படுத்த வேண்டும், இந்திய அளவில் விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்ட மசோதா தாக்கல் செய்ய வேண்டும், மேலும் கடந்த10 ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில் அனைத்து பணித்தளங்களிலும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான புகார் கமிட்டி அமைப்பதை உறுதி செய்து கண்காணிப்பு செய்திட வேண்டும்,


Post Office Scheme: வீட்டிலிருந்தே ரூ.1.11 லட்சம் சம்பாதிக்கலாம் - கணவன் - மனைவிக்கான போஸ்ட் ஆஃபிஸ் சேமிப்பு திட்டம்




அனைத்து வழிகளிலும் பெண்களை முன்னேற்றினால் தான்  இந்தியா முன்னேற்றம் அடையும் என்ற அடிப்படையில்  மத்திய மாநில அரசுகள் சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என  கோரிக்கை விடுத்து பொதுக்கூட்டத்தில் 13 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றினர். இந்த உலக மகளிர் தின விழா பொதுக்கூட்டத்தில் தேனி - திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு நிர்வாகிகள் மற்றும் திரளாக பெண்கள் கலந்து கொண்டனர்.