மதுரை மாநகர் வைகை ஆற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது நீர் வரத்து இருப்பதால் ஆற்றில் நீர் தற்போதும் இருந்து வருகிறது. இந்த நிலையில் வைகைஆற்றில் கழிவுநீர் மற்றும் குப்பைகளை கலப்பதை தடுப்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இரண்டு புறங்களிலும் உயரமான தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை மீறியும் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் வைகை ஆற்று கரையோரங்களில் இருந்து கழிவுநீர் ஆற்று நீரில் கலந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுவருகிறது.






மதுரை தத்தனேரி ஈ.எஸ்.ஐ., சாலை பின்புறம் உள்ள வைகை ஆற்றில் முழுவதுமாக கழிவுநீர் மற்றும் ரசாயன கழிவுகள் போன்று வைகை ஆற்றில் கலந்து செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் நீரின் நிறம் மாறி துர்நாற்றம் வீசக் கூடிய நிலை காணப்படுகிறது. அந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், உணவகங்கள், மருத்துவமனைகள் உள்ள நிலையில் கழிவு நீரானது எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது?  என்பது தெரியாத அளவிற்கு பைப் லைன் மூலமாக மண் கொட்டப்பட்டு மறைக்கப்பட்டு அந்த நீரானது வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டுவருகிறது. இதே போன்று அண்ணாநகர், தெப்பக்குளம் அதனை ஒட்டியுள்ள  பகுதிகளிலும் பல்வேறு கட்டிடங்களில் இருந்து கழிவுநீரானது வைகை ஆற்றில் கலக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் கழிவு நீரை வைகை ஆற்றில் கலக்கும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. 



 

இதேபோன்று கழிவு மற்றும் ரசாயன நீர் வைகை ஆற்றில் கலப்பதால் அதனை குடிக்கக்கூடிய கால்நடைகள் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பொழுது விவசாயமும் கடுமையாக பாதிப்புக்குள்ளாக கூடிய நிலை ஏற்படும் எனவும் வைகை நதி மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வைகை ராஜன் உள்ளிட்ட  சமூக அலுவலர்கள் நம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண