தமிழ்நாடு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கி தன்னிறைவு அடைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை, அரசு தாலுகா மருத்துவமனை, கிராம மருத்துவமனை என எல்லா இடங்களிலும் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கிராமங்கள் அளவில் தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தி வருகின்றனர்.  மதுரை மாவட்டத்தில் மார்ச் 15ம் தேதி முதல் நேற்றுவரை 6,37,958  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல் 4,10,024 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1090 தடுப்பூசிகளும், அரசு மருத்துவமனையில் 160 தடுப்பூசிகளும், ஆரம்ப சுகாதரா நிலையங்களில் 1720 தடுப்பூசிகளும் உள்ளன. இதனால் மதுரை மாவட்டத்தில் 2970 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 





 

மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 179 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70685-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 625 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 66512 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1048-ஆக இருக்கிறது. இந்நிலையில் 3125 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் விசாரித்தோம்.

 


 

விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 162 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43237-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 542 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 40831-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 503 இருக்கிறது. இந்நிலையில் 1903 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 



 

 

சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 104  நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16603-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 88 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 15440-ஆக அதிகரித்துள்ளது. இன்று  கொரோனாவால் உயிரிழப்பு இல்லை. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 186 இருக்கிறது. இந்நிலையில் 977 நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 76 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,055-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 160 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 17842-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1  நபர் உயிரிழந்துள்ளார். இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 315 இருக்கிறது. இந்நிலையில் 898 கொரோனா பாதிப்பால் இராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 



 

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் 74 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25864-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 200 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 24411-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 278 இருக்கிறது. இந்நிலையில் 1175 கொரோனா பாதிப்பால் புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.