பணியின் போது சுவர் தலை மீது விழுந்து மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்துக்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்கம்பம் திடீரென விழுந்ததில் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த சின்னராசு மகன் முத்துக்குமார் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு பணி நிரந்தரம் பெற்ற நிலையில் தற்போது இவருக்கு சரண்யா என்கிற மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
மதுரை வில்லாபுரம் பூ மார்க்கெட் அருகே வாகனம் மோதி பழுதாகி இருந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் ஊன்றும் பணியில் நேற்றிரவு மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது புதிய மின்கம்பத்தை நிலை நிறுத்துவதற்காக அருகில் இருந்த மரத்தின் மீது கயிறு கட்டி இழுத்துக் கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக மரம் சாய்ந்ததில் மின்கம்பம் அருகில் இருந்த சுவற்றில் விழுந்தது, இதில் சுவரும் இடிந்து அருகில் நின்று கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் முத்துக்குமாரின் தலையில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக முத்துக்குமாரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் நேற்று இரவு உயிர் இழந்தார். முத்துக்குமார் மதுரை அவனியாபுரத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு பணி நிரந்தரம் பெற்ற நிலையில் தற்போது இவருக்கு சரண்யா என்கிற மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணியின் போது சுவர் தலை மீது விழுந்து மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்...,” ஐந்துக்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்கம்பம் திடிரென விழுந்ததில் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த சின்னராசு மகன் முத்துக்குமார் மீது விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் எங்கள் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முத்துக்குமார் அவர்களின் குடும்பத்திற்கு மின்வாரியம் சார்பாக உதவிகள் செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ' - பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடையா? இதுதான் உங்க தேச பக்தியா? - சரமாரியாக சாடிய உச்ச நீதிமன்றம்!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ' - Uttarkashi Tunnel Disaster: உத்தரகாசி சுரங்க விபத்து - மீட்பு பணியில் தினசரி எடுக்கப்பட்ட முயற்சிகளும், முடிவுகளும்