பெரியகுளம் அருகே அரசு பேருந்தும், தனியார் மில் பேருந்தும் மோதல் - 20 பேர் காயம்

அரசு பேருந்தும், தனியார் மில் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்துகளில் பயணித்த 18 நபர்கள் காயம்.

Continues below advertisement

பெரியகுளம் அருகே அரசு பேருந்தும், தனியார் மில் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் அரசு பேருந்து நடத்துனர் மற்றும் தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர் படுகாயம் அடைந்தனர். மேலும் இரண்டு பேருந்துகளில் பயணித்த 18 நபர்கள் லேசான காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

Free Breakfast Scheme: கைமாறும் காலை உணவு திட்டம்? பள்ளி மாணவர்களுக்குத் தனியார் மூலம் வழங்க தீர்மானம்


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி புறவழிச்சாலையில் திருப்பூரில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பேருந்து கிராம புறவழிச்சாலையை கடந்த போது, தேனியில் இருந்து வத்தலகுண்டு நோக்கி தனியார் மில் தொழிலாளர்களை ஏற்றுச் சென்ற பேருந்தும், மோதிய விபத்தில் இரு பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.மேலும் இந்த தனியார் மில்  பேருந்து ஓட்டுநரும், அரசு பேருந்து நடத்துனரும் பேருந்தில் இடுப்பாடுகளுக்குள் சிக்கினர்.இதனைத் தொடர்ந்து இங்கு வந்த தேவதானப்பட்டி காவல்துறையினர் பேருந்து இடிபாடுகளுக்குள் சிக்கு இருந்த இருவரையும் மீட்டனர். மேலும் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த பயணிகள் 18 நபர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். 

Theni: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை


வானிலை மையத்தின் அறிவிப்புகளை எப்படி புரிந்துகொள்வது..? சொற்களும்...விளக்கமும்..!

இதனைத் தொடர்ந்து காயமடைந்த அனைவரும் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து தேவதானபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரசு பேருந்தும் தனியார் நெல் பேருந்தும் நேருக்கு நேர் மோதாமல் பக்கவாட்டில் மோதியதால் லேசான காயங்களுடன் உயிர் சேதம் இன்றி தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement