1. குழந்தையுடன் விட்டுச் சென்ற கணவரிடம் ஜீவனாம்சம் பெற்று தரக்கோரி  லெட்சுமி என்ற பெண் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

 

2. கள் இறக்க அனுமதிக்க கோரி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே விவசாயிகள் கள் குடித்து போராட்டம் நடத்திய தால் பரபரப்பு ஏற்பட்டது.

 

3. நெல்லையில் குடிநீர் வடிகால் வாரிய தற்காலிக பணியாளர்களுக்கு ஒப்பந்தப்படி செட்யூல் ஆப்ரேட் சம்பளம் வங்கி மூலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தற்காலிக பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



4. ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 4 நகரசபைகளில் 111 கவுன்சிலர்களை தேர்வு செய்ய 231 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

 

5. தூத்துக்குடியில் சீர்மிகு நகர திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிறைவடைந்துள்ள பணிகளான வ .உ. சி கல்லூரி அருகில் போக்குவரத்து பூங்கா , அறிவியல் பூங்கா, மானுடவியல் பூங்கா மற்றும் கோளரங்கம், தருவைகுளம் உரக்கிடங்கில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சி. வ. குளம் மேம்படுத்தும் பணி ஆகியவற்றினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்கள்.

 

6. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு, திறந்தவெளி அருங்காட்சியக பணிக்காக வருவாய்த் துறையினர் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



7. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பல மாதங்களுக்குப் பிறகு பேரி ஜம் ஏரி சுற்றுலாப்பகுதி திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

8. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது. 

 

9. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பராமரிப்பின்றி சிதைந்து வரும் வரலாற்று சான்றாக திகழும் கல்தூண் மண்டபங்களை சீரமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




 



10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும்  903 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 83981-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 596  நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 77929-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1198 இருக்கிறது. இந்நிலையில் 4854 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.