1. நெல்லை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
2. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை- ராமநாதபுரம் இடையே ரெயில்பாதையை மின் மயமாக்கும் திட்ட பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடந்துள்ள நிலையில் விரைவில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளார்.
3. நெல்லை மாவட்டத்தில் பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 54 நபர்கள் கைது மேலும் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் சுமார் 1200 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
4. பொங்கல் விடுறை முடிந்த நிலையில் சொந்த ஊர் திரும்பியவர்கள் வெளியூருக்கு படையெடுத்து செல்வதால் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இரண்டாவது நாளாக நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கொரோனோ பரவலை தடுக்க மாநகர போலீசார் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
5. மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 439 வது பிறந்த நாளை முன்னிட்டி மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை நுழைவு வாயிலில் மாமன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள்,
உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
6. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (19.01.2022) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காலை 10.00 மணியளவில் காணொலி காட்சி மூலம், புதிதாக கட்டப்பட்ட மதுரை மாவட்டம், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்கள்.
7. சிவங்கை மாவட்டம் கண்டுபட்டியில் 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்ட மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு நடந்ததில் ஒருவர் இறந்தார். 80 பேர் காயமடைந்தனர்.
8. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பக்தர்களின்றி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
9. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் நாட்டு வெடி குண்டு போட்டுவிட்டு தப்பி ஓடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
10. மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்ப திருவிழா தைப்பூச தினத்தன்று வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் நேற்று தெப்ப திருவிழாவை காண முடியாமல் பொதுமக்கள் படகு சவாரி மூலம் மைய மண்டபத்தை சுற்றி சென்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!