1. ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது மீன்கள் விலை கணிசமாக குறைந்துவிட்ட நிலையில், நண்டுகளின் விலை மட்டும் சற்றும் இறங்காமல் தொடர்ந்து ஏறுமுகமாக உச்சத்தில் உள்ளது. குறிப்பாக நண்டு விலை கடந்த காலங்களில் ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திடீரென்று கிலோ ரூ.1000 தொட்டது. தொடர்ந்து நண்டுகளின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது.

 

2. தூத்துக்குடி கடற்கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த  3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.



 

3. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி காரில் கட்டிட ஒப்பந்ததாரர் கொண்டு வந்த ரூ.1.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

4. சிவகங்கை மாவட்டம் ப் திருப்புவனம் அருகே மின் தடையை தடுக்க கிராம மக்கள் மின் கம்பியில் செங்கற்களை கட்டி தொங்கவிட்டுள்ளனர். எனவே இதனை சரிசெய்து மின்வெட்டை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

5. திருச்சியைச் சேர்ந்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பலரிடம் ரூ.12.44 கோடி மோசடி செய்தனர். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா (58), ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பிரான்சிஸ் (38) உட்பட 14 பேரை கைது செய்தனர். இதையடுத்து கைதான 2 ஆசிரியர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் உத்தரவிட்டார்.



 

6. தேனி மாவட்டம் புகழ்பெற்ற சுருளி அருவி 2 ஆண்டுகளுக்கு பின் சுற்றால பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் நீர்வரத்து குறைவாக வந்ததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

 

7. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே வாகனச் சோதனையில் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 350 கிலோ கந்தக மருந்து கலவை பிடி பட்டது.

 

8. விருதுநகர் நகராட்சி அலுவலகத் தில் வேட்புமனு வாங்காமல் தூங்கி விழுந்த உதவி தேர்தல் அலுவலரால் பரபரப்பு ஏற்பட்டது.

 

9. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி,  சிறுவனின் உணவுக்குழாயில் சிக்கியிருந்த 5 ரூபாய் நாணயத்தை அகற்றி டாக்டர்கள் குழு அசத்தினர்.


 






10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும்  231 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90024-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 551  நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 85352-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1216 இருக்கிறது. இந்நிலையில் 3456 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.