1. ராமநாதபுரம் அருகே சிலை கடத்தல் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 7 கிலோ எடையுள்ள அம்மன் சிலையுடன் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
2. சிங்கப்பூரில் இருந்து வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கு டெல்டா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
3. மதுரையில் பெண் தர மறுத்ததால் ஆத்திரத்தில் மாமா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய பொறியாளர் தீபன் சக்கரவர்த்தி 30, கைது செய்யப்பட்டார்.
4. தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் 182.50 ஏக்கர் அரசு நிலம் மோசடி செய்த வழக்கில் 9 அரசு அதிகாரிகள், 2 உதவியாளர்கள், அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் உள்பட 14 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ராமராஜா கைது 39, செய்யப்பட்டார். மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு தலை மறைவாகியுள்ளார்.
6. தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகளை தென் மாநில விமான நிலையங்களின் திட்ட பொதுமேலாளா் ஸ்ரீ கிருஷ்ணா, விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதனைத் தொடர்ந்து விமான நிலைய இயக்குநா் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடி செலவில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் 2023 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக முடிவடையும். அதன் பிறகு தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து மும்பை, தில்லி, ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு விமான சேவை தொடங்கும்.
7. நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிவந்திப்பட்டி காருச்சேரி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் சோதனை செய்தபோது 2 டன் ரேசன் அரிசி கேரளாவிற்கு கடந்த வந்தது தெரியவந்தது, இதுதொடர்பாக அரிசி உரிமையாளர் கருத்தப்பாண்டி, உதவியாளர் சரவணன் ஆகியோரை கைது செய்தனர். கருத்தபாண்டி அளித்த தகவலின் பேரில் அவரது வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
8.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை, நெல்லை - தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் வரும் ஜனவரி 12, 16ம் தேதிகளில் இயக்கப்படுகிறது, இந்த ரயில் நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி வழியாக தாம்பரம் செல்லும், பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
9.தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள புங்கவர்நத்தம, ஆத்திக்கிணறு, முள்ளுப்பட்டி, சோழபுரம், ஈராட்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அரசின் விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனத்தினால் சோலார் பிளான்ட் அமைக்கப்பட்டு வருவதால் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே பணிகளை நிறுத்த வலியுறுத்தி விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சோலார் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10.தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தில் கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் சிறப்பு ஆராதனை ஏராளமானோர் பங்கேற்றனர்.