1. தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் சந்தையில் 1 கோடிக்கு கூட விற்பனையாக நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிக்கின்றனர்.

 

2. மதுரை மாவட்டம் மேலூர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதிகளில் உள்ள முல்லை பெரியாறு விஸ்தரிப்பு கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

 

3. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏவும், விவசாயிகள் சங்க மாநிலத் தலைவருமான குணசேகரன் மாட்டு வண்டியில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

4. தேவர் குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இருந்து நேற்று காரில் சென்றார். அப்போது பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

5. சிவகங்கை மாவட்டம். கீழடியில் பொது மக்கள் தொல்பொருட்களை காண தொல்லியல் துறை 10 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது.

 

6.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். அதில் ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம் வருகிற 4-ந் தேதி தொடங்கி 9-ந் தேதி வரை நடக்கிறது.

 

7. மதுரை ''அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்தாண்டு கரும்பு அரவையை துவக்க ஏதுவாக மாநில அரசு ரூ. 10 கோடி வழங்க வேண்டும், '' என, முன்னாள் அமைச்சர் உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

 

8. மதுரை கூடல்புதூரில் பிராந்தி பாட்டிலை காட்டி மிரட்டி செயின் பறித்த வாலிபர் களை போலீசார் கைது செய்தனர்.

 

9. வைகை அணையை துார் வாராததால் 7 டி. எம். சி. , நீர் கொள்ளளவு குறைந்துள்ளது. அணையை துார்வார முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மதுரையில் தெரிவித்தார்.

 

10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 14 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75202-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 18 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 73836-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1172 இருக்கிறது. இந்நிலையில் 194 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.