அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன் வெற்றி பெற்றால் எய்ம்ஸ் மருத்துவமனை வர பாடுபடுவார்; திரைப்பட நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் பேட்டி.
பவர்ஸ்டார் வாக்கு சேகரிப்பு
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனும், அ.தி.மு.க., சார்பில் டாக்டர் டாக்டர் சரவணனும் போட்டியிடுகின்றனர். பிற வேட்பாளர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் இருவரும் வெற்றியை நோக்கி தேர்தல் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக நடிகை காயத்திரி ரகுராமன், வையாபுரி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் ஆதரவு கோரி வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.
பவர்ஸ்டார் செய்தியாளர் சந்திப்பு
மதுரை மக்களவை த் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் ஆதரித்து திரைப்பட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஆட்டோ நிலைய மற்றும் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். தொடர்ந்து அவரிடம் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது காவல்துறையினருக்கு தகவல் பரவ சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காவல்துறையிடம் முறையாக அனுமதி வாங்கி நீங்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் இனிமேல் நீங்கள் அனுமதி வாங்கி தான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் மருத்துவர்
மதுரை என்னுடைய சொந்த ஊர் என்பதாலும், எனது உடன்பிறவா சகோதரான அதிமுக வேட்பாளர் ஆன சரவணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வந்துள்ளேன். இம் முறை உறுதியாக மருத்துவர் சரவணன் வெற்றி பெறுவார், படித்தவர், மருத்துவர், சொந்த ஊர் காரர் என்பதால் நிச்சயமாக வெற்றி பெறுவார். தொடர்ந்து ஏழை மக்களுக்கு நல்லது பண்ணுவார். வெற்றி பெற்றால் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கு முயற்சி எடுப்பார், இலவசமாக மக்களுக்கு மருத்துவம் பார்ப்பார். மதுரைக்காரர் என்ற பற்றில் மதுரை மக்கள் அவருக்கு வாக்கு செலுத்துவார்கள் என்று நினைக்கிறேன். அ.தி.மு.க.,விற்காக மதுரை மண்ணில் முதல் முதலாக பிரச்சாரத்திற்கு வந்துள்ளேன். தி.மு.க., ஆட்சி 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நல்ல மாற்றங்கள் வரும். இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி மிகவும் பிடிக்கும் இக்கட்சியில் மருத்துவர் அணி பொருளாளராக பணியாற்றி இருந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - காலையிலேயே சுடச்சுட கறி குழம்பு சூடான இட்லி: அனல் பறக்கும் பிரச்சாரத்தை துவங்கிய திமுக வேட்பாளர்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Latest Gold Silver Rate: இதுக்கு எண்டே இல்லையா? ரூ.53,000 -ஐ நெருங்கிய தங்கம் விலை..! மீண்டும் புதிய உச்சம்..