வேடசந்தூர் அருகே முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் மாநில இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளருமான டாக்டர் வி.பி.பி பரமசிவத்தை தரக்குறைவாக பேசியதாக கூறி பொதுமக்கள் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணியின் காரை வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Astrologer on PM Modi: அடுத்த முறையும் மோடிதான்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பார் - ஜோதிடர் போட்ட ட்வீட்




திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில்  நேற்று காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, மாலை வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளம்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் இடையே பேசிய அவர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் இளம்பெண் பாசறை மாநில செயலாளருமான டாக்டர் வி பி பி பரமசிவத்தை தரை குறைவாக பேசியதாக கூறி ஊர் பொதுமக்கள் திடீரென வேடசந்தூர் அடுத்துள்ள கோவிலூர் ராமநாதபுரம் என்னும் இடத்தில் ஜோதி மணியின் காரை சிறை பிடித்தனர்.


தாயை பிரிந்து தவித்த குட்டி யானை.. வனத்துறையினர் சேர்த்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம்




பின்னர் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அவரின் காரை நகர விடாமல் சிறை பிடித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். பின்னர் ஜோதி மணியுடன் வந்த தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த வாக்குவாதமானது சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜனின் சமரச பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் ஜோதி மணியின் காரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணியின் காரை வழிமறித்து பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


CM MK Stalin: தமிழ்நாட்டு ஆளுநரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறோம்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு


இதே போல் கடந்த சில தினங்களாக வேட்பாளர் ஜோதிமணி பரப்புரை செய்துகொண்டிருந்தபோது ஜோதிமணியை பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் சந்தித்து எதிர் கேள்வி எழுப்பியதும்,  இதே வேடசந்தூர் பகுதியில் இளைஞர் ஒருவர் ஜோதிமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. வேட்பாளர் ஜோதிமணி பரப்புரை செய்ய செல்லும் ஒரு சில பகுதிகளில் அவருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்ந்து நடந்து வருவதால் வேட்பாளர் ஜோதிமணி அதிருப்தியில் உள்ளார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.