தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உலக மகளிர் நாளை முன்னிட்டு மதுரை கே.கே.நகர் கிருஷ்ணய்யர் அரங்கில் நடைபெற்றது. அரசியல் மயமாகும் நீதிமன்றங்களும்; ஆபத்துக்குள்ளாகும் நீதிபரிபாலன முறையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் முன்னாள் நீதிபதி.ஹரிபரந்தாமன் மற்றும் முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கருத்தரங்க கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பழ.நெடுமாறன், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைகளில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு கையெருத்திடும் அதிகார கடமை மட்டுமே ஆளுநரின் அதிகாரம், ஆனால் தீர்மானங்களை கிடப்பில் போட்டுவைத்து அனுமதி தர மறுப்பது மக்களாட்சி மாண்பை சீர்குலைக்கும், சர்வாதிகாரபோக்குதனமாக உள்ளது. மத்திய அரசு நீதித்துறையை தங்களது கட்டுப்பாட்டில் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். இது ஜனநாயக மாண்பை சீர்குலைத்துவிடும்.
பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது தொடர்பான தனது கருத்தில் யாரும் உடன்படவில்லை என்பது தவறான கருத்து அதில் உடன்படாதவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது குறித்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் புதிய நம்பிக்கையும் உற்சாகத்தையும் தந்துள்ளது.பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது தொடர்பான ஆதாரம் கிடைத்தவுடன் அதனை ஊடகத்தினரை சந்தித்து வெளியிடுவேன். பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற தகவலை கூறிய நிலையில் தற்போது மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது" என்று கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Aavin Milk: ஆவின் பால் பாக்கெட் வாங்க ஆதார் கட்டாயமா? உண்மை என்ன? ஆவின் நிறுவனம் விளக்கம்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்