Thalapathy 69 : குட்பை.. முடிவுக்கு வரும் தளபதி விஜய் சகாப்தம்.. தளபதி 69 படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ

Thalapathy 69 Update : விஜயின் 30 ஆண்டுகால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக தளபதி 69 படத்தின் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது

Continues below advertisement

தளபதி 69

 நடிகர் விஜயின் கடைசி படமாக உருவாக இருக்கிறது தளபதி 69. தி கோட் படம் வெளியான சில நாட்களே கடந்துள்ள நிலையில் விஜயின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாக இருக்கிறது.  கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறது. எச் வினோத் இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகர் விஜய் இந்த படத்தின் மூலமாக சினிமாவுக்கு குட் பை சொல்ல இருக்கிறார். இதனால் இந்த தகவல் விஜய் ரசிகர்களை ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் சோகமும் கலந்த உணர்வுக்கு ஆட்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.

Continues below advertisement

தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்  நாளை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயின் 30 ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் விதமாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது

 

Continues below advertisement